காஞ்சிபுரத்தில் காவல்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி- எஸ்பி பங்கேற்பு
காஞ்சிபுரம், மார்ச் 26:
காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணிக்கு மாவட்ட எஸ்பி கே.சண்முகம் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்து பங்கேற்றார்.
பேரணியில் ஏடிஎஸ்பிக்கள் வெள்ளத்துரை, பாலகுமாரன்,சார்லஸ் சாம்ராஜ், காஞ்சிபுரம் டிஎஸ்பி கி.முரளி உட்பட காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள் பலரும் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணி காஞ்சிபுரம் காந்தி சாலையில் தேரடியிலிருந்து தொடங்கி ராஜவீதிகள் வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிறைவு பெற்றது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கோயம்புத்தூரிலிருந்து வந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் உதவி கமாண்டன்ட் பிரதீஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோரும் துப்பாக்கி ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
படவிளக்கம் : காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை சார்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற எஸ்பி.கே.சண்முகம் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள்
.jpg)
.jpg)

.jpg)
No comments
Thank you for your comments