Breaking News

காஞ்சிபுரத்தில் ரூ.25லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம், மார்ச் 5:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேரடி தெருவில் ரூ.25லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியகாஞ்சிபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் கட்டிடப்பணிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதனைத் தொடர்ந்து தேரடி தெருவில் ரூ.25லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அதன் பின்னர் மளிகைத் தெருவில் உள்ள நியாயவிலைக்கடைக்கும் சென்று பொருட்களின் இருப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார்.

நியாயவிலைக்கடைக்கு பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். கடையை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் ஆட்சியர் நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். 

இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன்,பொறியாளர் கணேசன் ஆகியோர் உட்பட அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

படவிளக்கம்  : காஞ்சிபுரம் தேரடி தெருவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை ஆய்வு செய்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய ஆட்சியர் கலைச்செல்வி மோகன்

No comments

Thank you for your comments