Breaking News

இருசக்கர வாகனம் வாங்க உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம் அடுத்த பொன்னியம்மன் பட்டறை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த (Swift) காரை சோதனை செய்த போது இருசக்கர வாகனம் வாங்க உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.



வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பொன்னியம்மன் பட்டறை அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுசியா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த கமல் நாதன் என்பவர் காரை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு லட்ச ரூபாய் இருப்பதை கண்டு பணம் குறித்து விசாரித்தனர்.

இருசக்கர வாகனம் வாங்குவதற்காக 2 லட்சம் ரூபாய் எடுத்து வந்ததாக கூறிய நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் இரண்டு லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லட்ச ரூபாயை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கலைவாணியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

No comments

Thank you for your comments