Breaking News

இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் - சாதனை விளக்கம் பிரசுரங்கள் விநியோகம்

முதலமைச்சர்  மு.க,ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும் கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி_ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்  க.சுந்தர் அவர்களின் ஆலோசனையின் படி இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் என்கின்ற துண்டு பிரசுரத்தினை காஞ்சிபுரம் மாநகரம் இரண்டாவது பகுதிக்குட்பட்ட 20-வது வட்டத்தில் பூத் எண் 172ல் அடங்கியுள்ள ராஜாஜி மார்க்கெட் தும்பவனம் அருணாச்சலம் தெரு, ஒத்தவாடை தெரு, பாலாஜி தியேட்டர் எதிர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பகுதி கழக செயலாளர் எஸ்.சந்துரு அவர்களுடன் 20வது வட்ட கழக செயலாளர் தனசேகரன் மற்றும் கழகத்தினருடன் துண்டு பிரசுரங்களை விநியோகித்து   திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் பகுதி கழக பிரதிநிதி ஆர்.செந்தில், பகுதி கழக பொருளாளர் ராமமூர்த்தி, வட்ட கழகத்தை சார்ந்த அன்சர் பாஷா, மாபுப் பாஷா,புருஷோத்தமன் உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.

இவர்களுடன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக. மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் இ.ஜாபர்  சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.


No comments

Thank you for your comments