Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்வேறு கட்டிடங்களுக்கான  அடிக்கல் கல்வெட்டினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு மற்றும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்து, நடைபெற்றுகொண்டிருக்கும்  பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இன்று (06.02.2024) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்வேறு கட்டிடங்களுக்கான  அடிக்கல் கல்வெட்டினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு மற்றும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்து, நடைபெற்றுகொண்டிருக்கும்  பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 36.14 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட 51 வார்டுகளை உள்ளடக்கியது ஆகும். இப்பகுதியின் தற்போதைய மக்கள் தொகை 2,76,360 ஆகும்.  இந்நகரம் கோயில் நகரமாக உள்ளதாலும், வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் இந்நகருக்கு வருகை புரிகின்றனர்.  இந்நகரம் பட்டு வளர்ச்சியிலும்  ஈடுபட்டுள்ளதால் தோராயமாக  தினசரி ஒரு இலட்சம் மக்கள் வந்து செல்லக்கூடிய நகரமாகவும் உள்ளது. 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மஞ்சள் நீர் கால்வாய் பகுதியில் மூடுகால்வாய் அமைத்தல் பணியானது  ரூ. 40 கோடி மதிப்பீட்டிலும், அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ. 8.77 கோடி மதிப்பீட்டில் அமைக்கவும், ரூ. 1.2 கோடி மதிப்பீட்டில் பிள்ளையார் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணியை மேற்கொள்ளவும், மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடங்கள் ரூ. 10 கோடி மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் ரூ.59.97 கோடி மதிப்பீட்டிலான கட்டிடங்களுக்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர்வழங்கல் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  ஆகியோர்  புதியதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கான  அடிக்கல் கல்வெட்டினை திறந்து வைத்தார்கள்.

இதனை தொடர்ந்து ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நேரு மார்க்கெட் கட்டும் பணிக்காக தாயார்குளம், அண்ணாநகர் பகுதியில் வேகவதி ஆற்றில் பாலம் பணிக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுவரும் இராஜாஜி மார்க்கெட்டினையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வினை தொடர்ந்து, காரபேட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்படவுள்ள காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கான இடத்தினை நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ்,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ்,காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் திரு.குமரகுருநாதன், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர்.திரு.செந்தில் முருகன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி  மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments