Breaking News

காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

காஞ்சிபுரம், பிப்.7:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் சாம் ராஜதுரை புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் போதைப்பொருள் தடுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்தல் ஆகியன குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் சாம் ராஜதுரை கொடியசைத்து தொடக்கி வைத்தார். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ்,ஆய்வாளர் சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியானது ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் தடுத்தல்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியன குறித்த பதாகைகளையும் கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.நிகழ்வில் அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர்கள் சதீஷ்குமார்,சுரேஷ்குமார்,குழந்தை நல மைய அலுவலர் அமுதா,தேசிய மாணவர் படை தலைவர் சுரேஷ் ஆகியோர் உட்படபலரும் கலந்துகொண்டனர்.


 

No comments

Thank you for your comments