Breaking News

பாலுசெட்டி சத்திரம் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர்  நித்யா சுகுமார்  முன்னிலையில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சிக்குட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது.


இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய கழக துணை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட பிரதிநிதி பி‌.என்.ரவி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மகாவீர்சந்த், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சம்பத், கிளை செயலாளர் சையத் அலி, ஊராட்சி மன்ற துணை தலைவர் அன்பு, ஆடலரசு (எ)சீமான், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி து‌.அமைப்பாளர் சி.எஸ்.விஜி, கிளை கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தினேஷ் பாபு இளைஞரணியை சேர்ந்த பாலகிருஷ்ணன், தேவேந்திரன், சபரி மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments