Breaking News

ரௌடிகள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதே எனது முதல் பணி - காஞ்சிபுரம் புதிய எஸ்பி கே.சண்முகம்

காஞ்சிபுரம்,ஜன.13:


காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எம்.சுதாகர் பரங்கிமலை துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதனையடுத்து கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையராக பணியாற்றி வந்த கே.சண்முகம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்ற பின்னர் அவர் கூறுகையில் ஏற்கனவே எஸ்பியாக இருந்த எம்.சுதாகர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் ரௌடிகள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதே எனது முதல் பணியாக இருக்கும்.

பேருந்து நிலையம்,மார்க்கெட் உட்பட முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு கஞ்சா வருவது தெரிந்தால் அது எந்த வழியாக வருகிறது என்று தீவிர கண்காணித்து போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

மக்களவைத் தேர்தலை எவ்வித அசம்பாவித சம்பவமும் இல்லாமல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

.பொதுமக்கள் எந்த நேரமும் எனது தொலைபேசி எண்ணான 94442 12749 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் கே.சண்முகம் கேட்டுக்கொண்டார்.

புதியதாக பொறுப்பேற்ற எஸ்பி கே.சண்முகத்துக்கு ஏடிஎஸ்பிக்கள் வெள்ளத்துரை,பாலகுமார், சார்லஸ்,டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் உட்பட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.


 

No comments

Thank you for your comments