காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மதிவண்டிகள்- எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
காஞ்சிபுரம், ஜன.4:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்க்கு அரசின் சார்பில் விலையில்லா மதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
பெரியகாஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி,தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி உட்பட மொத்தம் 10 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்க்கு மொத்தம் 2408 விலையில்லா மதிவண்டிகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலசன் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யு வராஜ் உட்பட அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments