காஞ்சிபுரத்தில் காந்தியடிகள் நினைவு தினம் அனுஷ்டிப்பு
காஞ்சிபுரம், ஜன.30:
படவிளக்கம் : மகாத்மா காந்தியின் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தும் காதி பவன் செயலாளர் கே.பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள், ஊழியர்கள்
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காதி பவன் எனப்படும் கதர்துணிகள் விற்பனை நிலையத்தில் காந்தியடிகள் நினைவு தினம் சங்க தலைவர் டி.ஸ்ரீபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
சங்க செயலாளர் கே.பாஸ்கர் முன்னிலை வகித்தார். மகாத்மா காந்தியின் உருவப்படத்தை தொழிலதிபர் ரமணன் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து காதி பவன் கிளை நிர்வாகிகள்,ஊழியர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் சர்வசமய பிராத்தனையும்,நூற்பு வேள்வியும் நடைபெற்றது.எம்.ஆர். ரவிக்குமார் நன்றி கூறினார்.

No comments
Thank you for your comments