வாகன தணிக்கை: ஒரே நாளில் 7.50லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு - காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி
35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக போக்குவரத்து வாகனங்களில் அதிகபாரம் மற்றும் அதிக பயணிகள் ஏற்றி செல்வதை தணிக்கை செய்தல் நிகழ்வு பட்டியல் இடப்பட்டு, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் பெரியார் நகர், சாலவாக்கம் மற்றும் வாலஜபாத் ஆகிய பகுதியில் அந்தந்த பகுதி காவல் துறை அலுவலர்களுடன் இணைந்து தணிக்கை செய்தனர்.
இந்த தணிக்கையில் 15 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கினார். இதில் 7-வாகனங்கள் மலை மண், எம்.சாண்டு, உடைத்த கல் போன்றவைகளை அளவுக்கு அதிக சுமை ஏற்றி வந்ததற்காக 3,49,500/- ரூபாயும்,ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மேக்ஸி கேபில் பள்ளிக்குழந்தைகளை அதிகமாக ஏற்றியதற்க்கும், வாகனத்திற்கு தகுதிச்சான்று, சாலைவரி முறையாக கட்டாமல் இருந்த மூன்று மேக்சி கேப் வேன்களையும் சிறைபிடித்து வாலஜபாத் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அதற்க்கு தனியாக 4,00,000/- ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இன்று ஓரே நாள் வாகன தனிக்கையில் சுமார் 7,49,500/- ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும்,தணிக்கையின்போது ஓட்டுனர்களுக்கு அதிக பாரம் மற்றும் அதிக பயணிகளை ஏற்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அறிவுரைகளும் விளக்கவுரைகளும் வழங்கப்பட்டது.
இதையம் படிக்க: நியூஸ் 7 செய்தியாளர் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் - காவல்துறை அலட்சியத்தால் நேர்ந்த அவலம் - நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடும் கண்டனம்

.jpg)

No comments
Thank you for your comments