Breaking News

35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழா - தேநீர் வழங்கியும், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழா 15.01.2024 முதல் 14.02.2024 வரை நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 


காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக இதன் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக சுங்கசாவடி வழியாக செல்லும் களைப்படைந்த வாகன ஓட்டுனர்களுக்கு தேநீர் வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்குதல் குறித்து நிகழ்ச்சியை நடத்த பட்டியல் இடப்பட்டு, 

ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடி அருகே காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் நிறுத்தி ஓட்டுனர்களை ஒருங்கிணைத்து காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நெடுந்தூர பயணத்தால் ஏற்படும் விபத்து குறித்தும் அதை தடுக்கும் முறை குறித்தும் விளக்கவுரை அளித்தும் பின் அணைத்து ஓட்டுநர்களுக்கும் தேநீர் வழங்கியும், சாலைபாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

இந்நிகழ்வில் சுமார் 150 நபர்களுக்கு மேல் பங்குபெற்று பயனடைந்தனர்.

No comments

Thank you for your comments