குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி வங்கி கணக்கு மற்றும் லாக்கரில் இருந்து ரூ.33 லட்சம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் - குன்றத்தூர் - நகராட்சி ஆணையர் திருமதி குமாரி அவர்களை கடந்த 11.01.24 அன்று லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்து, அவரது வீட்டை சோதனை செய்த போது கணக்கில் வராத பணம் ரூ 580000 மற்றும் வங்கி லாக்கர் சாவி 3 கைப்பற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து செங்கல்பட்டு தலைமை கூடுதல் நீதிபதி அளித்த லாக்கர் சோதனை வாரண்ட்ன் அடிபடையில் 29.01.2024-ம் தேதி சேலையூர் எச்டிஎப்சி பேங்க் லாக்கரில் குமாரி அவர்களின் கணவர் யோகமன்னன் மற்றும் குமாரி ஜாயிண்ட் அக்கவுண்டில் 8 லட்சம் பணமும் , ஆக்சிஸ் வங்கியில் 20 லட்சம் பணமும், தாம்பரம் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 5 லட்சம் பணமும் மொத்தம் ரூ 33,00,000 லட்சம் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments
Thank you for your comments