சேலத்தில் ரோசய்யா நினைவு நாள்
சேலம் :
தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் தலைவர் நாகா. அரவிந்தன் தலைமையில் சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் அருகில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தெலுங்கு நல உரிமை சங்க மாநில தலைவர் ஜெயக்குமார், சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் காந்தி, நிர்வாகிகள் கேசவன், சத்யநாராயணன்,குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments