குன்றத்தூர் பகுதிகளில் - மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இன்று (07.12.2023) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், வரதராஜபுரத்தில், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட PTC காலனி பகுதிகளை பார்வையிட்டு, வரதராஜபுரம் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமினை பார்வையிட்டு, அங்கு தங்குவைக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, வெளிவட்ட சாலையில் அமைந்துள்ள அடையாறு ஆறு கடக்கும் பாதையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். இதனை தொடர்ந்து கெருகம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினையும், மௌலிவாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் இராயப்பா நகரில் மழைநீர் வடிகால் கீழ்மட்ட கால்வாயினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இவ் ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் பி.செந்தில்குமார், இ.ஆ.ப., வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராகுல்நாத், இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி. சரஸ்வதி மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ச.ரம்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments