Breaking News

சாலை அமைக்க பூமி பூஜை

கோவை :

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி காரமடை ஒன்றியம், தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் சீங்குளி கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ..4,00,000 மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் தலைமையில் பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவரும் மாவட்ட கவுன்சிலருமான சங்கீதா முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. 



நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை, ஒன்றிய குழு உறுப்பினர் சிவகாமி, பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், பொருளாளர் பிரபு, காரமடை மேற்கு ஓன்றிய பொறுப்பாளர் யோகானந்தம் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments