காஞ்சிபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பிற மாநிலங்களுக்கு கடத்தி வந்தவர் சுந்தர் என்ற சுந்தர்ராஜன்(37), இவர் மீது 21க்கும் மேற்பட்ட அரிசி கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காவல்துறையினர் இவரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் இவர் இம்மாதம் 6 ஆம் தேதி ஆரிய பெரும்பாக்கம் என்ற இடத்தில் நியாயவிலைக்கடை அரிசி மூட்டைகளை ஒரு மறைவிடத்தில் வைத்து அடுக்கிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தர் என்ற சுந்தர்ராஜனை கைது செய்தனர். மேலும் இவரிடமிருந்து 2150 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நியாயவிலைக்கடை அரசியை பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்தி வந்ததால் இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments
Thank you for your comments