Breaking News

மிமிக்கிரி பேச்சு சர்ச்சை : காஞ்சிபுரத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்,டிச.21:

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் குடியரசுத்துணைத் தலைவரை தரக்குறைவாக பேசியதாக மாவட்ட பாஜக சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மக்களவையில் குடியரசுத் துணைத் தலைவர்,சபாநாயகர் ஆகியோரை எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பிக்கள் தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தியதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமை வகித்தார். 

துணைத்தலைவர்கள் கூரம்.விஸ்வநாதன், ஜம்போடை சங்கர், மகளிரணி துணைத் தலைவியர்களான எல்லம்மாள்,ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகர மேற்கு மண்டல தலைவர் காஞ்சி.வி.ஜீவானந்தம் வரவேற்று பேசினார்.

மாவட்ட பொதுச் செயலாளர்கள் ருத்ரகுமார்,வாசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஞானசூரியன், ஜீவானந்தம், தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜஷ் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments