Breaking News

செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் அபாய நிலையில் மின் கம்பங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தில் ஆபத்து உண்டாக்கும் நிலையில்  பழுதடைந்த மின் கம்பங்கள் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 


செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு நடப்பட்ட மின் கம்பங்கள், தற்போது முற்றிலுமாக சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் இருக்கின்றன. குறிப்பாக சோத்துப்பாக்கம் திரு.வி.க நகர்  முதல் தெருவில் சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பம் தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

 இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் மற்றும் பகுதி மக்கள் கூறியதாவது :-

"எத்தனையோ முறை இந்த சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுங்கள் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துவிட்டோம். 

ஆனால், அவர்கள் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். இந்த மின் கம்பங்களை மாற்றாமல் மின்வாரியத்தினர் அலட்சியமாக உள்ளனர் இதனால் எப்போது பாதிப்பு ஏற்படும் என தெரியவில்லை இப்பகுதி மக்களாகிய நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றோம்" என்றனர்.

No comments

Thank you for your comments