காஞ்சிபுரத்தில் பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள் கட்டும் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம், நவ.30:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற பழங்குடியின குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விப்பேடு,ஊத்துக்காடு,சிங்காடிவாக்கம்,காட்ராம் பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற பழங்குடியின குடும்பங்களுக்கு மொத்தம் 443 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இவை 1937.81 லட்சத்தில் கட்டுமானப் பணிகளும், அதில் அடிப்படை வசதிகள் 119.48 லட்சத்திலும் நடந்து வருகிறது.இவற்றை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது பணிகளை விரைந்து முடிக்கவும்,குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை விரைவில் செய்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுகைள் வழங்கினார்.
ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குர் சா.செல்வக்குமார்,உதவி ஆட்சியர் (பயிற்சி)சங்கீதா,வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவர் தேவேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments