Breaking News

மேஷம் முதல் மீனம் வரை... இன்றைய ராசி பலன்கள்




மேஷம்

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் தெளிவு உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். உறவினர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 

அஸ்வினி : வரவுகள் கிடைக்கும்.

பரணி : எண்ணங்கள் மேம்படும்.

கிருத்திகை : மேன்மை உண்டாகும். 



ரிஷபம்

இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்குக் கற்பனைத்திறன் மேம்படும். குழந்தைகளின் செயல்பாடுகளில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எழுத்துத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : கற்பனை மேம்படும். 

ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும். 

மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆலோசனைகளால் தெளிவு ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம்  உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வரவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும். 

திருவாதிரை : உதவி கிடைக்கும். 

புனர்பூசம் : ஆதரவு உண்டாகும்.


 

கடகம்

புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். விளையாட்டு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சுபகாரியம் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாற்றம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

பூசம் : தெளிவு பிறக்கும். 

ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



சிம்மம்

நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புகழ் மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : வரவுகள் கிடைக்கும்.

பூரம் : வாய்ப்புகள் அமையும்.

உத்திரம் : மாற்றமான நாள்.



கன்னி

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். ஊக்கம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும். 

அஸ்தம் : நிதானம் வேண்டும்.

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும். 



துலாம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : அனுசரித்துச் செல்லவும். 

சுவாதி : அனுபவம் கிடைக்கும்.

விசாகம் : புரிதல் உண்டாகும்.


விருச்சிகம்

வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். பிரபலமான நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வர்த்தகப் பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறதி குறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : லாபம் அதிகரிக்கும்.

அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கேட்டை :  மகிழ்ச்சியான நாள்.


தனுசு

பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்குத் தெளிவை ஏற்படுத்தும். அரசு காரியங்களில் ஆதாயம் உண்டாகும். சில பிரச்சனைகளில் பொறுமையைக் கையாளவும். விவசாயப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். காப்பீடு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். அசதிகள் விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 

மூலம் : தெளிவு பிறக்கும்.

பூராடம் : பொறுமை வேண்டும்.

உத்திராடம் : முன்னேற்றமான நாள்.



மகரம்

மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய முதலீடுகள் தொடர்பான செயல்களில் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்வது நல்லது. பெருமை மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

உத்திராடம் : தைரியம் மேம்படும்.

திருவோணம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.



கும்பம்

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வழக்கு விஷயத்தில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உத்தியோகப் பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும்.  பொறுமை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம்: அலைச்சல்கள் உண்டாகும்.

சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.

பூரட்டாதி : பொறுமையை கடைபிடிக்கவும். 


மீனம்

தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்குத் திருப்தியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகளும், அறிமுகமும் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும். 

உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.

ரேவதி :  மகிழ்ச்சியான நாள்.


No comments

Thank you for your comments