Breaking News

உத்தரமேரூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் தார்ச்சாலைப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணியினை இன்று (14.12.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.




முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஒரக்காட்டுப்பேட்டை ஊராட்சியில்,  ஒரக்காட்டுப்பேட்டை - ஆத்தூர் வரை ரூ.38.92 இலட்சம் மதிப்பில் 0.52 கிலோமீட்டர் வரை போடப்பட்டுள்ள தார் சாலையின் தரத்தினையும், திருவானைக்கோவில் ஊராட்சியில் ரூ.65.13 இலட்சம் மதிப்பில் 1.08 கிலோமீட்டர் வரை போடப்பட்டுள்ள தார் சாலையின் தரத்தினையும், தண்டரை ஊராட்சியில் ரூ.150.55 இலட்சம் மதிப்பில் 2.72 கிலோமீட்டர் வரை போடப்பட்டுள்ள தார் சாலையின் தரத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

மலையாங்குளம் ஊராட்சியில் பழங்குடியினர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.777.86 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 178 பழங்குடியினர் குடியிருப்புகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

இவ் ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், ஊரக வளாச்சி முகமை செயற்பொறியாளர் திரு.இராஜராஜன், உதவி செயற்பொறியாளர் திருமதி.கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments