Breaking News

புதர் மண்டிய தண்டுரை ஏரி - பொழுதுபோக்கு இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வண்டலூர் செல்லும் பைபாஸ் சாலையை ஒட்டி  பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ளது தண்டுரை ஏரி. இந்த ஏரியில் பொதுமக்கள் பயன்படும் வகையில் ஏரியை சுற்றி கரை அமைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில் பார்க் மற்றும் போட்டிங் வசதி செய்து கொடுத்தால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


பொழுதுபோக்குவதற்காக பொதுமக்கள்  தினம்தோறும் வந்து செல்லும் அளவிற்கு இந்த ஏரியை சீரமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.

தற்போது இந்த ஏரியில் பராமரிப்பு இல்லாமல் முள்  செடி,  புதர்களாலும் சூழப்பட்டு ஏரி மிகவும் அவல நிலையில் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை  தெரிவித்து வருகின்றனர். இந்த ஏரியை பராமரித்து அழகு படுத்தினால் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் என்கிறார்கள்.

இந்த ஏரி மழை காலங்களில் நிரம்பினால் கால்வாயின் வழியாக சேக்காட்டு ஏரிக்கு தண்ணீர் சென்று அடையும். இந்த ஏரியானது எப்போதும் வற்றாத ஏரியாகத்தான் காணப்படுகிறது. ஆகவே  இந்த ஏரியை சீரமைத்து, படகு விட்டு பொழுதுபோக்கு இடமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments

Thank you for your comments