காஞ்சிபுரத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு
காஞ்சிபுரம், டிச.4:
படவிளக்கம் : காஞ்சிபுரம் வேளிங்கப்பட்டரை பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பகுதியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சு.முத்துச்சாமி
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம்,வையாவூர் மற்றும் களியனூர் ஆகிய பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பழங்குடியின மக்களுக்கு தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் சென்று 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பாய், போர்வை உள்ளிட்டவை அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக வேளிங்கப்பட்டரை, ஓரிக்கை பிரதான சாலை,காமாட்சி அம்மன் காலணி ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்த பகுதிகளை பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
வேகவதி ஆற்றில் தூர்வாரப்படும் பகுதிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நடைபெற்ற அமைச்சரது ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பி.செந்தில்குமார்,எம்எல்ஏ க்கள் க.சுந்தர், எழிலரசன்,எஸ்பி எம்.சுதாகர்,காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
பொதுமக்கள் புகார்கûளை தீர்க்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை,வெள்ள பாதிப்புகள்,மின்கம்பங்கள் சாயந்து கிடத்தல் உள்ளிட்ட எந்த உதவியையும் உடனடியாக பெறுவதற்காக மாவட்ட நிர்வாகம் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படு ம் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் 044 27237107 மற்றும் 044}27237207 அல்லது கைபேசி எண் 9348056227 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்

No comments
Thank you for your comments