Breaking News

இரண்டு மனித தலைகளை வெட்டி நரபலி வீடியோ? - நடிகர் பார்த்திபன் ட்விட்டால் பரபரப்பு!

இரண்டு மனித தலைகளை வெட்டி நரபலி கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை இயக்குநர் பார்த்திபன் பகிர்ந்து, 'இது என்னவென்று தெரிந்தால் சொல்லுங்கள்' என்று ட்விட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மனித தலைகளை வெட்டி வாழை இலையில் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும்படியான நரபலி வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பார்த்து அதிர்ந்து போய், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 

‘'இது என்னவென்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்! நானும் போலீசுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்' என கூறியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், இரண்டு இளைஞர்களின் தலை துண்டாக வெட்டப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தலைகளின் பக்கத்திலேயே இருவரது சடலமும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடக்கிறது. காளி வேடத்தில் ஒருவர் கையில் கத்தியோடு ஆடிக்கொண்டிருக்க, சாமியார் ஒருவர் பூஜை செய்கிறார்.

இதனை பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சியளிக்கும் இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இது உண்மையிலேயே நடந்ததா அல்லது சினிமா ஷூட்டுக்கு போடப்பட்ட செட்டப்பா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் நடிகர் பார்த்திபன் இதுகுறித்து போலீஸில் தெரிவித்துள்ள நிலையில் இச்சம்பவம் குறித்தான விசாரணை தகவலும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.


No comments

Thank you for your comments