கொடிசியாவில் ஷாப்பிங் திருவிழா.
கோவை மாவட்டம் சிறு தொழில்கள் சங்கம் கொடிசியா சார்பில் ஒன்பதாவது ஆண்டாக கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா வருகிற 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் கொடிசியா வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
கொடிசியா தலைவர் திருஞானம், கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் நந்தகோபால்,கொடிசியா செயலாளர் சசிகுமார்,ஆகியோர் ஷாப்பிங் கையேட்டை வெளியிட்டனர்.
அவர்கள் தெரிவித்ததாவது
கோவை ஷாப்பிங் திருவிழா என்ற நுகர்வோர் திருவிழா கொடிசியா இன்டெக் தொழில்நுட்ப மையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 23ஆம் தேதி தொடங்கி 1ஆம் தேதி வரை நடக்கிறது இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பில் 200க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இத்திருவிழாவில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறயிருக்கிறது. கண்காட்சியில் சுவையான தின்பண்டங்கள் சிற்றுண்டி உணவு வகைகள், வீட்டு உபயோக, அலங்காரப் பொருட்கள், பூஜை பொருட்கள், பர்னிச்சர் ஜவுளி ரகங்கள், பேஷன் உபகரணங்கள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், ஓவியங்கள், காலணிகள், தங்கம் மற்றும் வைர நகைகள் பரிசுப் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் நவீன ஆடை வகைகள், உடற்பயிற்சி சாதனங்கள் கைவினைப் பொருட்கள் என இடம்பெற உள்ளன. இத்திருவிழாவில் இசை நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.24 ஆம் தேதி லக்ஷ்மன் ஸ்ருதியின் நேரடி இசைக்கச்சேரி சூப்பர் சிங்கர் முகேஷ் சையத் வானதி தானே ஸ்ரீ பங்கேற்கும் திசை நிகழ்ச்சி, கோமல் தியேட்டர் சார்பில் திரௌபதியின் கதை என்ற இதிகாச மேடை நாடகம், 29 ஆம் தேதி சேலம் வேலூர் இசைக்கு குழுவினர் இடையே இன்னிசை போட்டி மேஜிக் ஷோ மிமிக்ரி டான்ஸ் ஸ்டாண்ட் அப் நகைச்சுவை மற்றும் நடிகரும், இயக்குனருமான கே. பாக்யராஜ் குழுவினரின் பட்டிமன்றம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments