இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்கள்
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் டிச.8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடித்து வெளியான ஜப்பான் திரைப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் டிச. 11 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூஸ் முனிசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணப்படம் வருகிற டிச.8 ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
மேலும் சமக் வெப் தொடர் நாளை (டிச. 8) சோனி லைவிலும் வெளியாகிறது.

No comments
Thank you for your comments