டீப்பேக்கில் சிக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரியங்கா சோப்ராவின் டீப்பேக் விடியோ வெளியாகி, அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட நடிகையை இலக்காகக் கொண்டு டீப்பேக் முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ, அண்மையில் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
செயற்கை நுண்ணறிவு வளா்ச்சியின் ஒரு பகுதியாக ‘டீப்பேக்’ தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒருவா் பேசும் உண்மையான ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள் போன்று மற்றொரு நபா் மூலம் போலியான ஆடியோ, வீடியோ, புகைப்படங்களை உருவாக்க முடியும்.
அதாவது ஒருவரது உருவத்தையும், குரலையும் பயன்படுத்தி மற்றொருவா் நடித்து அவரை போன்ற வீடியோவையோ, ஆடியோவையோ உருவாக்க முடியும்.
டீப்பேக்கில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொலி இணையத்தில் வைரலானது. தொடர்ந்து, கத்ரினா கைப் ஆகியோரின் போலி விடியோக்கள் வைரலான நிலையில் கஜோலின் விடியோவும் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், ஒரு நிறுவனத்துக்கு ப்ரோமோஷன் செய்யும் பிரியங்கா சோப்ரா, தனது வருமானத்தை தெரிவித்து அந்த நிறுவனத்துக்கு விளம்பரம் செய்வது போல் டீப்பேக் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து டீப்பேக் முறையைப் பயன்படுத்தி போலி விடியோக்கள் உருவாக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments
Thank you for your comments