கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு 650 கழக நிர்வாகிகளுக்கு கை கடிகாரம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் எம் எம் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள ஏ.கே.ஜி தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் கழக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் மாநகர செயலாளர்
சி கே வி தமிழ்ச்செல்வன் தலைமையில் காஞ்சி மாநகர தி.மு.க கழகம் சார்பில் 650 கழக நிர்வாகிகளுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் க.சுந்தர் கழக நிர்வாகிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு கை கடிகாரம் வழங்கினார்.
இந்த நிகழ்வில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் அவர்கள் கலந்துகொண்டு பூத் கமிட்டி புத்தகங்களை விரைவாக முடிக்கவும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு ஆலோசனைகளை பேருரையாக வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பின எழிலரசன் அவர்கள் நடக்கவிருக்கின்ற இரண்டாவது மாநில இளைஞர் அணி மாநாட்டிற்கு அனைவரும் வருகை தந்து, கழகத் தலைவர் கூறும் எழுச்சிமிகு உரையினை கேட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றினை காண வேண்டும் என பேருரை ஆற்றினார்.
பின்பு இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் செல்வம், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன், பகுதி கழக செயலாளர்கள் திலகர், சந்துரு, தசரதன், வெங்கடேசன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.எஸ்.இராமகிருஷ்ணன்,
பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி , முருகன் கூட்டுறவு சங்க தலைவர் முத்துச்செல்வன், பகுதி கழக துணை செயலாளர்கள் பி எஸ் குடியரசு , வினோத் குமார், தனலட்சுமி , அய்யலக அணி மாவட்ட தலைவர் பி.எம்.நீலகண்டன் , மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி , விஜயா , மாநகராட்சி வழக்கறிஞர் அரவிந்த் குமார், காஞ்சி தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி துணைத் தலைவர் இ ஜாபர் , 18 ஆவது வார்டு வட்ட செயலாளர் கே சம்பத், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார் , நெசவாளர் அணி அமைப்பாளர் மலர்மன்னன் , முன்னாள் நகர மன்ற உறுப்பினர் குமணன், பகுதி அமைத்தலைவர் குமரேசன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜிம் மாஸ்டர் ஜெய்கணேஷ், மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் மு.முரளி , தொண்டரணி துணை அமைப்பாளர் பஸ் ஸ்டாண்ட் மணிகண்டன் , பகுதி கழக துணை செயலாளர் விமல்தாஸ், சாட்சி சண்முகம் , 6வது வட்டக் கழக செயலாளர் சண்முகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர் .
No comments
Thank you for your comments