காவாந்தண்டலத்தில் ரூ.23லட்சத்தில் புதிய மின்மாற்றி - உத்தரமேரூர் எம்எல்ஏ இயக்கி வைத்தார்
காஞ்சிபுரம், டிச.3:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காவாந்தண்டலத்தில் ரூ.23லட்சம் மதிப்பில் புதியதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை எம்எல்ஏ க.சுந்தர் சனிக்கிழமை இயக்கி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காவாந்தண்டலம் கிராமத்தில் குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி மின்சாதனங்கள் பழுதாகி வந்தது.இதன் காரணமாக அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தரை சந்தித்து புதியதாக மின்மாற்றி அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.23லட்சம் மதிப்பில் 63 கேஏவி திறன் கொண்ட புதிய மின்மாற்றியை உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் இயக்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக அகே காவாந்தண்டலம் கிராமத்தில் 15வது மானியக்குழு நிதியின் மூலம் ரூ.20லட்சம் மதிப்பில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கும் க.சுந்தர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் மின்வாரியம்,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்,ஒன்றியக் குழுவின் துணைத் தலைவர் திவ்யப்பிரியா இளமது, காவாந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார்,காஞ்சிபுரம் ஒன்றிய திமுக செயலாளர் குமணன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
படவிளக்கம் : காவாந்தண்டலம் கிராமத்தில் புதியதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை இயக்கி வைக்கிறார் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர்
No comments
Thank you for your comments