“நடப்போம் நலம் பெறுவோம்” நடைப்பயிற்சி இயக்கம் - எம்.பி., எம்.எல்.ஏ., ஆட்சியர் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மருத்துவம் துறை சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்” நடைப்பயிற்சி இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் தொடங்கி வைத்து நடைபயிற்சி மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு மருத்துவம் துறை சார்பில் இன்று (04.11.2023) “நடப்போம் நலம் பெறுவோம்” நடைப்பயிற்சி இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் தொடங்கி வைத்து நடைபயிற்சி மேற்கொண்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி “நடப்போம் நலம் பெறுவோம்” எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்
8 கிலோமீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலம் பெறுவதற்கான நடைப்பயிற்சி இயக்கம் நடைபெற்றது.
இந்த நடைப்பயிற்சி இயக்கத்தினை 04.11.2023 இன்று காலை 6.00 மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற நடைபயிற்சி இயக்கத்தினை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த நடைப்பயிற்சி நடைபெறும் வழித்தடங்கள்
(8 கிலோமீட்டர்) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து திருப்பருத்திக்குன்றம்
– கீழ்கதிர்பூர் சாலை மார்க்கமாக கீழ்கதிர்பூர் வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
இந்த நடைப்பயிற்சியில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த நடைப்பயிற்சி துவங்கும் இடமான மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
அதில் பொது மருத்துவம், பல் மருத்துவம், இயன் முறை மருத்துவம், சித்தா மருத்துவம் மற்றும் உணவியல் வல்லுநர் அடங்கிய குழு நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ முகாமில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. நடைபயிற்சியின் போது ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய குடிநீர் மற்றும் பழச்சாறுகள் வழங்கப்பட்டது.
தினமும் நடைபயிற்சியை மேற்கொள்வதன் மூலம் நலவாழ்வை எளிதாக பெறலாம். இந்நடைபயிற்சி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, இதயத்தை பலப்படுத்துகிறது, எலும்புகளை வலுவாக்குகிறது, உடல் எடையை குறைக்கிறது, நல்ல உறக்கத்தினை தருகிறது. மொத்தத்தில் இந்த நடைபயிற்சியானது ஆரோக்கியமான வாழ்நாளை தருகிறது.
இந்த நடைப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் திரு.குமரகுருநாதன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments
Thank you for your comments