18ம் தேதி : காஞ்சிபுரத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு
பிள்ளைப்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைப்பாக்கம் 110/33-11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் 33 KV & 11 KV Feeders அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 18.11.2023 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை உள்ள பகுதிகள் வெங்காடு, நாவலூர், பிள்ளைப்பாக்கம், TVH Appartment மற்றும் பிள்ளைப்பாக்கம் சிப்காட் ஆகியவை இதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என செயற்பொறியாளர், திருப்பெரும்புதூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments