Breaking News

காஞ்சிபுரம் கோயில்களில் மதுரை ஆதீனம் தரிசனம்

காஞ்சிபுரம், நவ.19-

காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்தார்.


படவிளக்கம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரியார் சுவாமிகள்

மதுரை ஆதீனம் 233-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

ஆதீனத்தை அறங்காவலர் குழு உறுப்பினர் வ.ஜெகன்னாதன் வரவேற்று ஆலயத்துக்குள் அழைத்து சென்றார்.பின்னர் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காமாட்சி அம்மன் திருக்கோயில் ஆகியனவற்றில் சுவாமி தரிசனம் செய்தார்.

அந்தந்த கோயில் நிர்வாகங்களின் சார்பில் ஆதீனத்துக்கு மரியாதையும், கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது. மாலையில் ஓரிக்கை நவதுர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமிக்கு நடைபெற்ற பஜனையிலும், ஜோதி வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.

பின்னர் பக்தர்களுக்கு ஆசியும் வழங்கினார்.சனிக்கிழமை பிள்ளையார்பாளையம் முருகன் கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி திருவிழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகளையும்,ஆசிகளையும் மதுரை ஆதீனம் வழங்கினார்.


No comments

Thank you for your comments