அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கேக்வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் ஆலோசனைப்படி வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் படுநெல்லி ஊராட்சியில் கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46-வது பிறந்த நாள் விழாவினை காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சிறுவேடல் க.செல்வம் கழகக் கொடியினை ஏற்றி கேக்வெட்டி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்
இதில் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் ( து ) அமைப்பாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்
No comments
Thank you for your comments