விபத்துக்களை குறைக்க நேரடி கள ஆய்வு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கண்டறியப்பட்டுள்ள 13-Black Spot கள் (2019 – 2022) காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர், காவல்துறையுடன் இணைந்து நேரடி கள ஆய்வு செய்து ஒவ்வொரு இடங்களிலும் விபத்துக்களை குறைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து பவர் பாயிண்ட் மூலம் விளக்கப்படம் தயாரித்து கடந்த 06.11.23 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு மற்றும் சாலைபாதுகாப்பு மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர் செல்வம் அவர்களால் டெமோ செய்துகாட்டபட்டது.
அதில் குறிப்பிடப்பட்ட மாற்றங்களை சரிசெய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க சொன்னதின் பேரில் ஒலிமுஹ்ஹமது பேட்டை சந்திப்பில் காஞ்சிபுரம் காவல், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சேர்ந்தவர்கள் 09.11.23 அன்று கள ஆய்வு செய்தனர்.
அப்போது விபத்துகளை குறைக்க அந்த சந்திப்பில் மீடியன், சிக்னல் விளக்குகள், ஹைமாஸ்ட் லைட் போன்றவைகளை நிறுவதற்கான அம்சம் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டு அவைகளை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது.
.jpg)


No comments
Thank you for your comments