Breaking News

இருசக்கர வாகனத்தில் படமெடுத்த ஆடிய நல்லபாம்பு





காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டவர்களம்மாள் கோவில் சன்னதி தெரு பகுதியில் வசித்து வருபவர் எழில். சுயதொழில் செய்து வரும் இவர் தனது நிமிர்த்தமாக வெளியில் சென்று விட்டு இருப்பார்கள் தனது இரு சக்கர வாகனமான ஹோண்டா CD 110 இருசக்கர வாகனத்தினை வீட்டின் வெளிப்புறத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்த சூழ்நிலையில் மீண்டும் வெளியில் செல்வதற்காக இருசக்கர வாகனத்தினை எடுக்க எழில் வந்தபோது அவரது இரு சக்கர வாகனத்தின் செயின் கார்ட் பகுதியில் இருந்து சத்தம் வந்த நிலையில் கீழே குனிந்து பார்த்தபோது நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்தபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இரு சக்கர வாகனத்தினை நிறுத்தி விட்டு தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார்.

இதனையெடுத்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தின் செயின்கார்டு பகுதியில் சுருண்டவாறு சுற்றி சிக்கிக் கொண்டிருந்த சுமார் 4 அடி  நல்ல பாம்பினை பாம்பு பிடி கருவிகள் துணையோடு லாவகமாக பிடித்து எடுத்து சென்றனர்.

இருசக்கர வாகனத்தில் இருந்த நல்லபாம்பு தங்களது வீடுகளுக்குள் வந்துவிடுமோ என எண்ணி அக்கம் பக்கத்தினரும் இது குறித்து அறிந்த பகுதி மக்கள் சூழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments