வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் மழை காலங்களில் மழை வெள்ளத் தடுப்புப் பணிக்காக வைக்கப்பட்டுள்ள வெள்ள தடுப்பு உபகரணங்களையும், மடம் தெருவில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு,
தாட்டித்தோப்பு முருகன் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட உள்ள இடத்தினை பார்வையிட்டு, ஆசிரியர் நகரில். கால்வாய் தூர் வாரும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்பு உத்திரமேரூர் ஒன்றியம், மாகரல் ஏரியில் நடைபெற்று வரும் பழுதுபார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணியினை பார்வையிட்டு, உத்திரமேரூர்-வெங்கச்சேரியில் செய்யாற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்டு வரும் தரைப்பாலப்பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். அதனை தொடர்ந்து சிலாம்பாக்கம் கிராமத்தின் அருகே செய்யாறு ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணியினையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இவ் ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ச.ரம்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.செந்தில் முருகன், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் திரு.பெரியண்ணன், மாநகராட்சி பொறியாளர் திரு.கணேசன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு.நீல்முடியான், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments