Breaking News

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் குளத்தை தூர்வாரிய இளைஞர்கள்

காஞ்சிபுரம், நவ.11:

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் அருகேயுள்ள கோயில் குளத்தினை நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் இளைஞர்கள் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுடன் இணைந்து சனிக்கிழமை தூர்வாரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் மிக்கது காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில்.ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது,எட்டு கரங்களையும் உடைய மூலவர் என்ற சிறப்புக்கும் உரியது இக்கோயில். இதனருகேயுள்ள இக்கோயில் தெப்பக்குளம் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாராமல் புற்கள், புதர்கள் மண்டிக் கிடந்தது.

இந்நிலையில் இக்கோயிலின் அறங்காவலர் குழுவின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்த எஸ்கேபிஎஸ் சந்தோஷ்குமார் தலைமையில் ஏராளமான இளைஞர்கள், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுடன் இணைந்து தெப்பக்குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் செய்யப்பட்ட தூர்வாரும் நிகழ்வைப் பார்த்த அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எஸ்கேபி கார்த்திக்கும் குளம் சீரமைப்பின் போது உடன் இருந்தார்.

 

No comments

Thank you for your comments