Breaking News

காஞ்சிபுரம் ஸ்ரீசோலைவழி அம்மன் கோயிலில் புதிய விக்ரகம் பிரதிஷ்டை

காஞ்சிபுரம், நவ.23:-

காஞ்சிபுரம் நகரில் சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் திருச்சோலைத்தெருவில் அமைந்துள்ள பழமையான சோலைவழி அம்மன் கோயிலில் புதியதாக மூலவர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கலசாபிஷேகம் நடைபெற்றது.

படவிளக்கம் : பிரதிஷ்டை செய்யப்பட்ட புதிய விக்ரகமான சோலைவழி அம்மனுக்கு நடைபெற்ற தீபாராதனை

காஞ்சிபுரம் நகரில் சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் திருச்சோலைத் தெருவில் பல ஆண்டுகளாக சோலைவழி அம்மன் ஆலயம் சிதிலமடைந்த நிலையில் இருந்து வந்தது.

இதனையடுத்து இக்கோயில் அப்பகுதி பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டது. மூலவராக 6 அடி உயர சோலைவழி அம்மன்,துர்க்கை அம்மன், நவக்கிரகங்கள்,கிருஷ்ணர் உள்ளிட்ட விக்ரகங்களும் புதியதாக நிறுவப்பட்டது.

இச்சிலைகளுக்கான சிறப்பு யாக பூஜைகள் வியாழக்கிழமை கோ.பூஜையுடன் தொடங்கியது. 

லட்சுமி ஹோமம் மற்றும் மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பிறகு சிவாச்சாரியார்களால் கலசங்கள் மூலவர் சந்நிதிக்கு எடுத்து செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையடுத்து பல நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் மூலவர் சோலைவழி அம்மனுக்கும் உடன் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமாகவும், அலங்கார தீபாராதனைகளும், அதனையடுத்து அன்னதானமும் நடைபெற்றது.ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிளும்,அப்பகுதி பொதுமக்களும் செய்திருந்தனர்.



No comments

Thank you for your comments