ஆவடி காவல் ஆணையரகம் ஊர்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
ஆவடி :
கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணபிக்கலாம்
- ஆவடி காவல் ஆணையரக ஊர்காவல்படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
- கல்விதகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள்.
- குற்றப்பின்னனி இல்லாத நன்னடத்தை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
- ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்டபட்ட பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
- குடும்ப அட்டை (Ration Card) வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் ஊர்காவல் படையினருக்கு 45 நாட்கள் தினசரி 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு உதவுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவார்கள்.
சலுகைகள் சீருடை, தொப்பி மற்றும் காலணிகள் வழங்கப்படும் பெண்களுக்கு பகல் ரோந்து பணிகள், போக்குவரத்து பணிகள் மற்றும் ஆண்களுக்கு இரவு ரோந்து பணிகள் மற்றும் போக்குவரத்து பணிகளுக்கு ரூ.560/ வீதம் மாதத்தில் 05 நாட்களுக்கு ரூ.2800 மட்டும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
வெகுமதிகள்: சிறப்பாக மெச்சதகுந்த வகையில் பணிபுரிவோருக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பதக்கம் மற்றும் மேதகு ஜனாதிபதி அவர்களின் பதக்கம் ஆகியவை தகுதிகள் அடிப்படையில் வழங்கப்படும்.
மேற்கண்ட தகுதி உள்ளவர்கள், விண்ணப்பங்களை ஆவடி ஆயுதப்படையில் உள்ள ஊர்காவல்படை அலுவலகத்தில் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட
நாள் (06.11.2023 முதல் 14.11.2023 முடிய) 07 வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணிக்குள் நேரில் வந்து விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முகவரி:
காவல் உதவி ஆணையாளர் அலுவலகம்,
ஆவடி ஆயுதப்படை, ஊர்காவல்படை,
ஆவடி காவல் ஆணையரகம்.

No comments
Thank you for your comments