Breaking News

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில், தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து  தொடங்கி வைத்தார்கள்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில், இன்று (14.11.2023) தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்த நடைபயணத்தில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்தல் தொடர்பான வாசகங்களுடன் பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தொடங்கி பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவடைந்தது.

தேசிய குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, குழந்தைகள் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்கள்.

இப்பேரணியில்  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி.சக்தி காவியா, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், திரு.ஜ.சரவணக்கண்ணன், அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம். 





No comments

Thank you for your comments