Breaking News

உத்திரமேரூர் அருகே பாரம்பரிய உணவுத் திருவிழா - எம்எல்ஏ க.சுந்தர் துவக்கி வைத்தார்

உத்திரமேரூர் அருகே சிறுங்கோழி கிராமத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுங்கோழி கிராமத்தில் பாரம்பரிய உணவு திருவிழா ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி திட்ட அலுவலர் சரவண பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு உணவு பாரம்பரிய உணவு திருவிழாவினை துவக்கி வைத்து பார்வையிட்டார். 

இந்த உணவு திருவிழாவில் பாரம்பரிய இனிய வகைகளைக் கொண்டு உணவு தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த உணவு திருவிழாவில் தேர்வு செய்யப்படும் மாவட்ட அளவில் தயாராக உள்ளனர். உணவு திருவிழாவில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஏராளமான மகளிர் சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டு பாரம்பரிய தானியங்களை கொண்டு உணவு தயாரித்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார்,பேரூர் செயலாளர் பாரிவள்ளல், வட்டார மேலாளர் நித்தியானந்தம் உட்பட மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





No comments

Thank you for your comments