Breaking News

வீரபாண்டி ஆறுமுகம் நினைவு நாள்... அமைதி ஊர்வலம்

 சேலம், நவ.24-

தமிழ்நாடு முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர், வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முன்னாள்  அமைச்சர் முரசொலி மாறன் நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம் பூலாவரி கிளைக் கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் நினைவிடம் வரை அமைதி ஊர்வலமாக சென்றனர்.

சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருத்துவர் வீரபாண்டி ஆ.பிரபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோபால், சின்னதுரை, தமிழ்ச்செல்வன், நாமக்கல் ராணி, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், கழக பேச்சாளர்கள், மாற்றுக்கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments