Breaking News

காஞ்சிபுரத்தில் கடைஞாயிறு திருவிழா

காஞ்சிபுரம், நவ.19

காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோயிலில் பெண்கள் புது மண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி தலையில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் கடை ஞாயிறு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


விஷ்ணு பகவான் ஆமை வடிவில் சிவபெருமானை வணங்கிய பெருமைக்குரிய கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரர் திருக்கோயில். 

இக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைக்களில் மட்டும் பெண்கள் புதுமண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது காலம் காலமாக வழக்கமாக இருந்து வருகிறது.

இதனை கடைஞாயிறு திருவிழா என்றும் சிலர் மண்டை விளக்கு என்றும் சொல்வார்கள். 

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஏராளமான பெண்கள் ஆலய வளாகத்தில் புதுமண் சட்டியில் பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து அந்த மாவின் நடுவில் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி அதனை தலையில் சுமந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

பின்னர் கோயில் மூலவர் கச்சபேசுவரரையும் வழிபட்டனர்.கடை ஞாயிறு திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

படவிளக்கம் : புதுமண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி தலையில் சுமந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்திய பெண்கள்

No comments

Thank you for your comments