Breaking News

28-11-2023-ம் தேதி ராசி பலன்கள்


மேஷம்

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோர்களிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாகும். வியாபாரப் பணிகளில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் லாபம் அடைவீர்கள். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அஸ்வினி : நம்பிக்கை அதிகரிக்கும். 

பரணி : அறிமுகம் கிடைக்கும்.

கிருத்திகை : லாபம் மேம்படும். 



ரிஷபம்

மனதிலிருந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தெளிவு ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான கற்பனைகள் ஏற்பட்டு நீங்கும். கல்விப் பணிகளில் சில முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு  உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 

கிருத்திகை : தெளிவு ஏற்படும். 

ரோகிணி : கற்பனைகள் மேம்படும்.

மிருகசீரிஷம் :  ஒத்துழைப்பான நாள்.


மிதுனம்

பணிபுரியும் இடத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். செய்யும் முயற்சிகளில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது மன அமைதியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மிருகசீரிஷம் :  ஏற்ற, இறக்கமான நாள்.

திருவாதிரை : தாமதங்கள் குறையும். 

புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.


 

கடகம்

உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். வியாபார ரீதியான முயற்சிகள் பலிதமாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். குழப்பங்களிலிருந்து தெளிவு பிறக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : ஆதரவு ஏற்படும்.

பூசம் : வரவுகள் கிடைக்கும்.

ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.




சிம்மம்

பெற்றோர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வாகனம் சார்ந்த பிரச்சனைகளைச் சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : ஆதரவு கிடைக்கும். 

பூரம் : முயற்சிகள் ஈடேறும். 

உத்திரம் : நிதானம் வேண்டும்.




கன்னி

வியாபாரப் பணிகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் மேன்மை உண்டாகும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். சிக்கல் குறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : மேன்மை உண்டாகும்.  

அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

சித்திரை : பிரச்சனைகள் குறையும்.



துலாம்

வியாபாரப் பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை ஏற்பட்டு நீங்கும். அரசு காரியங்களில் அலைச்சல்கள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் தேவையற்ற பகைமையைத் தவிர்க்க இயலும். பயணங்கள் செல்லும் போது ஆவணங்களில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  நிறம்

சித்திரை :  மந்தமான நாள்.

சுவாதி : அலைச்சல்கள் மேம்படும்.

விசாகம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.


விருச்சிகம்

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில்  புதிய கூட்டாளிகளை இணைப்பது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : நிதானம் வேண்டும்.

அனுஷம் : புரிதல் ஏற்படும். 

கேட்டை : நெருக்கடிகள் நீங்கும். 



தனுசு

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அரசு வழியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். லாபம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

மூலம் : பயணங்கள் சாதகமாகும். 

பூராடம் : மகிழ்ச்சியான நாள் 

உத்திராடம் : தாமதங்கள் குறையும்.


மகரம்

கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்யோன்யமும் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் ஏற்படும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். இரக்கம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திராடம் : அன்யோன்யம் ஏற்படும். 

திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள். 



கும்பம்

நெருக்கமானவர்களின் உதவியால் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிகள் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிக்கல் குறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு  
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  நிறம்

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.

சதயம் : மாற்றம் உண்டாகும்.

பூரட்டாதி :  சாதகமான நாள்.




மீனம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். சிறு தூரப் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

பூரட்டாதி :  சுபச்செய்திகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி :  திருப்திகரமான நாள்.

ரேவதி :  புத்துணர்ச்சி உண்டாகும்.


No comments

Thank you for your comments