Breaking News

இன்றைய (17-11-2023) ராசி பலன்கள்


மேஷம்

குடும்பத்தினருடன் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தந்தையின் உடல்நலம் மேம்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.  அக்கம்-பக்கத்தினருடன் அளவுடன் பழகவும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : ஆரோக்கியம் மேம்படும்.

பரணி : பொறுப்புகள் கிடைக்கும். 

கிருத்திகை : உதவிகள் சாதகமாகும். 


ரிஷபம்

எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். பிள்ளைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். மனதில் இனம்புரியாத சில குழப்பங்கள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். மாற்றம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும். 

ரோகிணி : அனுபவம் கிடைக்கும். 

மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

மிதுனம்

உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு குறித்த சிந்தனைகள் மேம்படும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் நிலவும். வர வேண்டிய சில வரவுகள் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் பூர்வீக பிரச்சனைகள் தீரும். வரவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

திருவாதிரை :  மாற்றமான நாள்.

புனர்பூசம் : பிரச்சனைகள் தீரும்.

 

கடகம்

வாழ்க்கை பற்றிய புரிதல் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உறவுகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கவலைகள் விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : புரிதல் மேம்படும்.

பூசம் :  விட்டுக்கொடுத்துச் செல்லவும். 

ஆயில்யம் :  முன்னேற்றமான நாள்.


சிம்மம்

உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். தியானம், யோகா மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளுடன் பொழுதுகளைச் செலவிடுவீர்கள். பழைய சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். தள்ளிப்போன சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். வாகனப் பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மகம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

பூரம் :  அனுகூலமான நாள்.

உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.



கன்னி

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும். வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயண சிந்தனைகள் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். பேச்சு வன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். ஆபரணச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். முயற்சி மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் 

உத்திரம் : செலவுகள் அதிகரிக்கும். 

அஸ்தம் : வாய்ப்புகள் ஏற்படும்.

சித்திரை : பேச்சுக்களைக் குறைக்கவும்.


துலாம்

செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். அக்கம்-பக்கத்தினரால் ஆதரவான சூழல் அமையும். மனதில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சொத்து வாங்குவது, விற்பது குறித்த சிந்தனைகள் மேம்படும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். போட்டி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

சித்திரை : துரிதம் உண்டாகும்.

சுவாதி :  ஆதரவான நாள்.

விசாகம் : முடிவுகளை எடுப்பீர்கள். 

விருச்சிகம்

நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் மேம்படும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். புதிய நபர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 

அனுஷம் : எதிர்ப்புகள் நீங்கும். 

கேட்டை : அனுபவம் கிடைக்கும். 


தனுசு

புதிய வாய்ப்புகளில் யோசித்து முடிவெடுப்பது நல்லது. அலுவல் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடை அலங்காரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். செல்வாக்கை மேம்படுத்துவதற்கான சில விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : பொறுமையுடன் செயல்படவும்.

பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திராடம் : உதவிகள் தாமதமாகும்.


மகரம்

பிள்ளைகளின் படிப்பு சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். சுபச்செலவுகள் ஏற்படும். மனதில் புதிய ஆசைகள் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வணிகத்தில் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு மாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். சுகம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு 
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 

திருவோணம் : ஆசைகள் உண்டாகும். 

அவிட்டம் : எண்ணங்கள் கைகூடும்.


கும்பம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் அலைச்சலுக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்கும். ஆன்மிகம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். இழுபறியில் இருந்துவந்த பிரச்சனைகள் சுமூகமாகும். கவனம் வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம்: ஒத்துழைப்பு அதிகரிக்கும். 

சதயம் : கவனம் வேண்டும்.

பூரட்டாதி : பிரச்சனைகள் சுமூகமாகும். 


மீனம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். புது திட்டங்களை உருவாக்குவீர்கள். புதிய வீடு வாங்க கடனுதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு 
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி : வாதங்களைத் தவிர்க்கவும். 

உத்திரட்டாதி : செல்வாக்கு மேம்படும்.

ரேவதி :  மகிழ்ச்சியான நாள்.


No comments

Thank you for your comments