முன்னாள் அமைச்சர் சி.வி.எம். அண்ணாமலை அவர்களின் 107-வது பிறந்தநாள் விழா - மலர்தூவி மரியாதை
தந்தை பெரியார் அவர்களின் சீடராய், பேரறிஞர் அண்ணா அவர்களின் தம்பியாய், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராய் விளங்கிய முன்னாள் அமைச்சர், செந்தமிழ்ச் செல்வர் திரு. சி.வி.எம். அண்ணாமலை அவர்களின் 107-வது பிறந்தநாள் 20.11.2023 அன்று காஞ்சிபுரத்திலுள்ள கழக மாணவர் அணிச் செயலாளர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எல்.ஏ., அவர்களின் இல்லத்திலும், மாவட்டக் கழக அலுவலகத்திலும், கழக நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. க. சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, ஒன்றியச் செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன், பி.எம். பாபு, பகுதிக் கழகச் செயலாளர்கள் கே.திலகர், எஸ்.சந்துரு, அ.தசரதன், சு.வெங்கடேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் செ. சிகாமணி, கழக வர்த்தகர் அணி துணைச்செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் மலர்கொடி குமார், ஆர்.கே. தேவேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அ.யுவராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வெங்கட்ராமன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் தி. ராம்பிரசாத், எஸ்.தமிழ்செல்வன், மாநகர கழக நிர்வாகிகள் கே.ஏ. செங்குட்டுவன், ஏ.எஸ்.முத்துச்செல்வன், வ.ஜெகன்நாதன், பி. நிர்மலா, மாவட்ட பிரதிநிதிகள் வரதராஜன், பிரகாஷ், எஸ். சேகர், பாலமுருகன், மற்றும் பகுதி, ஒன்றிய, வட்டக் கழக நிர்வாகிகள் எஸ்.மாரிமுத்து, ஆர்.இளஞ்செழியன், பி.என்.ரவி, எஸ்.எஸ்.ஆர். சசிக்குமார், பி.எம்.நீலகண்டன், ஆறுமுகம், பார்த்திபன், வெங்கட்ராமன், அருள்முருகன், ஜெயபால், ஆர்.கே.சசிகுமார், ஜோதி, நந்தா, லோகுதாஸ், உலகநாதன், எல்லப்பன், குமரேசன், ஆர். வினோத், குடியரசு, நாத்திகம் நாகராசன், சாட்சி சண்முகசுந்தரம், வ.அய்யாவு, கே.கிருபாகரன், கே.வடமலை, கே.அருணாசலம், எம்.எஸ்.பாலன், பழனிவேலு, லட்சுமணன், பாலமுருகன், டி. சாகுல்அமீது, க. செல்வம், டி.ஜெய்கணேஷ், எஸ்.செந்தில், எஸ்.சிகாமணி, கே.சண்முகம், க.வரதன், ஏ.எஸ்.ரவி, ஜெ.தேவிகா, ஆ.செல்வி மாமன்ற உறுப்பினர்கள் வ.கமலக்கண்ணன், ப. சுரேஷ், எஸ்.கௌதமி, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், கழக அணிகளின் நிர்வாகிகள் மற்றும் சி.வி.எம். குடும்பத்தினர் என ஏராளமானோர் என் பாட்டனாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, கழக மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் ஏற்பாட்டில், காஞ்சிபுரம் மாநகரின் பல்வேறு இடங்களில் ஏழை, எளியோருக்கு பசி ஆற்றும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
No comments
Thank you for your comments