Breaking News

காஞ்சி சங்கர மடத்தில் 10 ஆயிரம் தாமரை மலர்களால் யாகபூஜை

காஞ்சிபுரம், நவ.10 -

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வெள்ளிக்கிழமை உலக நன்மைக்காக 25க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்களால் 10 ஆயிரம் தாமரை மலர்களால் யாகபூஜை நடைபெற்றது.


காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வேண்டுகோளின்படி சங்கர மட வளாகத்தில் உலக நன்மைக்காக 10 ஆயிரம் தாமரை மலர்களால் யாகபூஜை நடைபெற்றது.

25-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பங்கேற்று செய்த இந்த யாகபூஜையினை சங்கரட மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தொடக்கி வைத்தார்.

ஸ்ரீமடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரிகள் முன்னிலை வகித்தார். உலக நன்மைக்காக 10 ஆயிரம் தாமரை மலர்களை தேன், நெய், பசும்பால் ஆகியனவற்றில் மூழ்கி எடுத்து ஹோமத்தில் இட்டு சிறப்பு யாகபூஜை நடைபெற்றது.

வேத விற்பன்னர்களால் மொத்தம் ஒரு லட்சம் ராமாதசாச்சாரி மந்திரம் சொல்லப்பட்டு யாகபூஜை நடந்த பின்னர் அதிஷ்னாடனத்தில் மகா பெரியவர் சுவாமிகளுக்கு கலசாபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.

படவிளக்கம் : காஞ்சி சங்கர மடத்தில் உலக நன்மைக்காக வேத விற்பன்னர்களால் நடத்தப்பட்ட சிறப்பு யாக பூஜை

No comments

Thank you for your comments