Breaking News

Hyundai கார் உற்பத்தி தொழிற்சாலையில் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை

 Hyundai கார் உற்பத்தி தொழிற்சாலையில் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை

நிலவில் லேண்டர் இறங்குவது போலவும், அதிலிருந்து ஹூண்டாய் கார் வருவதைப் போல உருவாக்கம்


நவராத்திரியின் முதல் மூன்று நாட்களின் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் இந்த மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துவதே இதன் நோக்கமாகும். நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு அன்னை பூஜை செய்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கின்றன.

இதை நினைவுபடுத்தும் விதமாகவே சரஸ்வதி பூஜை அன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும், நம்முடைய வாழ்விற்கு ஆதாரமாக திகழும் பொருட்களை வைத்து கொண்டாடுகிறோம். நவராத்திரி விழாவின் நிறைவாக பத்தாவது நாளில் அம்பிகை மகிஷனை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை மிக முக்கிய விழாவாக பொதுமக்களால் கொண்டாடப்பட்ட வருகிறது. வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. வெளிநாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் ஆயுத பூஜை கொண்டாடுவது மிக முக்கிய ஒன்றாகவும் உணர்வுபூர்வமாகவும் பார்க்கப்படுகிறது.


அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள உண்டாயின் நிறுவனத்தில்,  இந்த வருடம் ஆயுத பூஜை ஆனது விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிரபல கார் தயாரிக்கும், நிறுவனமாக இருந்து வரும் உண்டாய் நிறுவனத்தில் டெக்னாலஜிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் பாரம்பரிய முறைப்படியும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. 

தலைமை நிர்வாக அதிகாரி உன்சூன் கிம் , சீஃப் மேனுஃபாக்சரிங் ஆபிசர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.  பாரம்பரிய முறைப்படி ஆரத்தி மாலை அணிவித்து ஹூண்டாய் ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆயுத பூஜை விழாவில் தமிழ் கடவுள் முருகனுக்கு பூஜை நடைபெற்றது. அதேபோன்று நிலவில் லேண்டெர் இறங்குவதைப் போலும் அந்த லேண்டரிலிருந்து உண்டாய் கார் இறங்குவது போலும் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டது. 

இவை அனைத்தும் சென்சார்கள் மூலம் தானியங்கியாக நடைபெற்றது. அதேபோன்று காரில் இருந்து சரஸ்வதி சிலை வெளிவருவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று ராக்கெட் விடுவதைப் போன்று பல்வேறு வகையில் வடிவமைப்புகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

No comments

Thank you for your comments