காந்தி ஜெயந்தி முன்னிட்டு உருவப் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
சென்னை:
நாடு முழுவதும் உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசின் சார்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ராஜ கண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், மகாத்மா காந்தியின் புகழைப் போற்றும் வகையில், அமைந்த பஜனைப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை தமிழக ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து கேட்டனர்.
காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில், அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதியான இன்று, கிராம சபைக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.
ஆளுநர் ஆர்.என். ரவி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
மகாத்மா காந்தி அன்றாட வாழ்க்கையில் நமது கடமைகளை மையமாக வைத்து செயல்பட வலியுறுத்தினார். அரசியலமைப்பு அடிப்படைக் கடமைகள் மீதான நமது நேர்மையான அர்ப்பணிப்பே தேசத் தந்தைக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கிராம சபை கூட்டம் தோன்றிய வரலாறு
முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் தோன்றிய வரலாறும் அதன் முக்கியத்துவமும், அதில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார்.
🔥 கிராம சபை - முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் சுவாரஸ்யமான வரலாறும்.. வேண்டுகோளும்..
மகாத்மா காந்தி அன்றாட வாழ்க்கையில் நமது கடமைகளை மையமாக வைத்து செயல்பட வலியுறுத்தினார். அரசியலமைப்பு அடிப்படைக் கடமைகள் மீதான நமது நேர்மையான அர்ப்பணிப்பே தேசத் தந்தைக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும். - ஆளுநர் ரவி pic.twitter.com/G1OzDwcAKO
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 2, 2023
மகாத்மா காந்தி அன்றாட வாழ்க்கையில் நமது கடமைகளை மையமாக வைத்து செயல்பட வலியுறுத்தினார். அரசியலமைப்பு அடிப்படைக் கடமைகள் மீதான நமது நேர்மையான அர்ப்பணிப்பே தேசத் தந்தைக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும். - ஆளுநர் ரவி pic.twitter.com/G1OzDwcAKO
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 2, 2023
No comments
Thank you for your comments